Monday, February 2, 2026

மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது !

spot_imgspot_imgspot_imgspot_img

கும்பல் வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் தேசத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது; பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்துகிறது. இந்த கடிதம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது என சுதிர் ஓஜா குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த முசாபர்நகர் தலைமை மாஜிஸ்திரேட் சுதிர் காந்த், அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முசாபர்நகர் போலீசார் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போட்டப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய காரணத்துக்காகவே பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img