மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டத்தின் ஆய்வுக் கூட்டம் இன்று கம்பம் ரிலாக்ஸ் பாய்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
ஆய்வுக்குழு உறுப்பினர்கள் மவ்லா நாசர், நாசிர் உமரி, மைதீன் உலவி, J.S.ரிபாயி ரஷாதி, தேனி மாவட்ட பொறுப்பாளரும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான மன்னை செல்லச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர நிர்வாகம் கட்டமைப்பது பற்றியும், கிளைகளை வலுப்படுத்துவது பற்றியும், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணி பற்றியும், அக்-2 முதல் 15 “மது ஒழிப்பு பிரச்சாரத்தை” மக்களிடம் கொண்டு செல்வது பற்றியும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசிக்கப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரியாஸ், மாவட்டப் பொருளாளர் சேக் பரீத், மாவட்ட துணைச் செயலாளர் கம்பம் கலில் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.