Sunday, February 1, 2026

வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்.. மீட்பு பணிகள் தீவிரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே மிதந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரில் வெள்ளத்தில் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. கார்களும் மனிதர்களும் நடமாடிய தெருக்கள் மலைகளில் பெருக்கெடுத்தோடும் காட்டாறுகளைப் போன்ற பெருவெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. ஹைதராத் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்து கிடக்கின்றன.

ஒரே நாளில் 26 செ.மீ அளவுக்கு மழை கொட்டியதால் ஒட்டுமொத்த நகரமே வெள்ளதேசமாகக் காட்சியளிக்கிறது. இதனையடுத்து மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் இறங்கினர்.

பந்தல்குடா என்ற பகுதியில் வெள்ளத்தால் சிக்கியவர்களுக்கு ராணுவ வீரர்கள் உணவுப் பொருட்களை விநியோகித்தனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ராணுவ மருத்துவ குழுக்களும் களமிறங்கி உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹைதராபாத் எம்பி அசாதுத்தீன் ஓவைசி, தெலுங்கானா துணை முதல்வர் கே.டி. ராமாராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img