Sunday, February 1, 2026

ராக்கெட் வேகத்தில் உயரும் கேஸ் சிலிண்டர் விலை – தவிக்கும் பொதுமக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சிலிண்டர் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img