Thursday, March 19, 2026

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டது – கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரு, தட்சிணா கன்னட, கலாபுராகி, பிதர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை கர்நாடகாவில் 9,68,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர், கர்நாடகாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாகவும் அடுத்த மூன்று மாதங்கள் மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அழர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வாரம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுதிதனார். மாஸ்க்குகளை அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img