Monday, February 9, 2026

அதிரையில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டித்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் இத்திட்டத்தை அதிரை திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அதிரை பேரூர் திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், 8வது வார்டு செயலாளர் P. செய்யது முஹம்மது, பேரூர் திமுக நிர்வாகிகள் முல்லை மதி, PMK. தாஜுதீன், MMS. அப்துல் கரீம், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் Y. மொய்தீன், 8வது வார்டு உறுப்பினர்கள் A. சாகுல் ஹமீது, S. அஹமது ஹாஜா, H. செய்யது பஹுதாத், ஜனாப். இர்பான் அலி, P. செய்யது புஹாரி, M.S. முஹம்மது இஸ்மாயீல் மற்றும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் தலைவர் VMA. அஹமது ஹாஜா, செயலாளர் PMS. அமீன், துணைச் செயலாளர் J. மீரா முகைதீன், இணைச் செயலாளர் M.B. அஹமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நியாயவிலைக்கடைகளில் ஒரு நாளைக்கு 150 டோக்கன்களுக்கு காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை நிவாரணம் வழங்கப்பட உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற முறையான முன்னேற்பாடுகள் நியாயவிலைக்கடைகளில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img