Wednesday, March 18, 2026

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது ? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அண்ணா பல்கலைக்கழகம் இன்று (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் தொடங்கும்.

நவம்பர் 15- ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்த பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் 7- ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும்.

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் பெரும் பகுதி தொழில்துறையின் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img