Friday, April 3, 2026

Big breaking: அதிரை வார்டு குளறுபடி விவகாரம்! போராட்டக்காரர்கள் மீதான வழக்கு தள்ளுபடி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது. நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றபோதும், மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் அவசர கதியில் உள்ளூர் அரசியல் பிரமுகருக்கு ஆதரவாக வார்டுகள் மறுவரையரையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் எல்லைகளை தீர்மானித்தத்திலும் குளறுபடிகள் நடந்துள்ளன.

இதனை கண்டித்து ஜனநாயக ரீதியில் அதிரை நகராட்சி முன் கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் உட்பட 26பேர் மீது 4 சட்டங்களில் 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 26 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை...

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது....

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து –...

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க...
spot_imgspot_imgspot_imgspot_img