Saturday, April 4, 2026

வார்டு எண் 12ல் கரடுமுரடான சாலை கண்டுகொள்ளாத கவுன்சிலரை கண்டித்து போராட்ட வியூகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

சாலையை உடைத்து ஒருமாதம் ஆகியும் ஒன்றும் நடக்காத அவலம் – கண்டுகொள்ளாத 12வது வார்டு கவுன்சிலரை கண்டித்து களமிறங்க வியூகம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில்.உள்ள நடுத்தெரு 3வது சந்தில் சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் பழையை சாலையை உடைத்தனர்.

உடைத்து ஒரு மாதமாகியும் எந்த முன்னெடுப்பும் இதுவரை நடக்கவில்லை.

உடைத்த சாலை பகுதி கரடு முரடாக உள்ளதால் அவ்வழியே செல்லும் முதியோர், சிறார்கள் கீழே விழுவதும் சிராய்ப்பு ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை ஏற்றி செல்ல வாகனங்கள் கூட வர இயலாத அளவிற்கு சாலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை கவுன்சிலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. இதனால் விரக்தியடைந்த 12வது வார்டு பகுதி மக்கள் நூதன போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை...

​அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது....

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து –...

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க...
spot_imgspot_imgspot_imgspot_img