தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை பிடித்து இழுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும்,

பெண்களின் மரியாதைக்கும், மத நம்பிக்கைக்கும் எதிரான இத்தகைய அநாகரிகச் செயல், ஒரு முதலமைச்சரிடமிருந்து வெளிப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் ஆகியுள்ளது நிதிஷ் குமாரின் இந்த நிகழ்வு
எனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என அந்த அறிக்கையில்.குறிப்பிட்டுள்ளார்.








