Sunday, September 14, 2025

டிராய் தலைவரின் சவாலை முறியடித்த பிரான்ஸ் நாட்டின் ஹேக்கர்…!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆதார் எண்ணை தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை கூறுங்கள் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் விட்ட நிலையில், அவர் தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் ஒன்றை விடுத்தார். ட்விட்டரில் அவரது 12 இலக்க ஆதார் எண்ணையும் வெளியிட்டார்.ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே எலியட் ஆண்டர்சன் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, பிறந்தநாள், தொலைபேசி எண், பான் எண் போன்ற தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டன. அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் லிங் செய்யப்படவில்லை என்றும் ட்வீட் போடப்பட்டது. அந்த தொலைபேசி எண் தனது அல்ல என டிராய் தலைவர் கூற, அது உங்களுடைய உதவியாளருடையது என பதில் ட்வீட் வந்தது.மேலும் ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் எனவும் எலியட் ஆண்டர்சன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் BAPTISTE- தான் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் இந்த தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img