Wednesday, March 18, 2026

வதந்திக்கு முற்றுப்புள்ளி குத்திய கலைஞர் : தொண்டர்கள் மகிழ்ச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்து அறிக்கை வெளியானது. இதனால் சென்னை முழுதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான திமுக தொண்டர்கள் இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறிக் கொண்டிருக்கும் வேலையில், தொண்டர்களை களைந்து செல்லுமாறும் காவல்துறையினர் உத்தரவிட்டனர். ஆனாலும் சில தொண்டர்கள் களைய மறுத்து விரக்த்தியில் அங்கே வைக்கப்படிருந்த தடுப்பு (பேரிகார்டுகளை) தூக்கி வீசினர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

இருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் கலைஞரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இரவு முழுதும் திமுக தொண்டர்கள் விழித்திருந்து காவேரி மருத்துவமனை அருகில் கூடி ‘தலைவா நீ எழுந்து வா’ என்ற கோஷங்கள் இட்டு கொண்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலைஞரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

கலைஞர் கருணாநிதி சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச் சந்திப்பின் இடையே தற்போது சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில், கலைஞர் கண் விழித்து ராகுலை பார்த்த வண்ணமாகவும், அவரிடம் மு.க.ஸ்டாலின் காதில் ராகுல் வருகையையும் கலைஞருக்கு தெரிவிப்பது போன்று உள்ளது.

இப் புகைப்படத்தினால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img