Wednesday, March 18, 2026

கலைஞருக்கு கடிதம் எழுதிய சிறுமியை நேரில் அழைத்து நெகிழ்ந்த ஸ்டாலின்…!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், அவரது தாயாரையும், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து உரையாடி மகிழ்ந்தார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வாரமாக கவலையில் ஆழ்ந்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி மிச்சேல் மிராக்ளின், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தமக்கு கலைஞர் தாத்தாவை மிகவும் பிடிக்கும் என்றும். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது மிகுந்த மன வருத்தத்தை தந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் அந்த கடிதத்தில் சிறுமி மிச்சேல் மிராக்ளின் குறிப்பிட்டிருந்தார். இதை படித்து நெகிழ்ச்சி அடைந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு அந்த சிறுமியையும், அவரது தாயாரையும் நேரில் அழைத்து, உரையாடி மகிழ்ந்தார். இதனால் அந்த சிறுமியும், தாயாரும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img