Monday, February 2, 2026

சவூதியில் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்த தமுமுக!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை பல்லாயிரக்கணக்கானோர் நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா மக்கா நகருக்கு சென்றுள்ளனர்.

ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்காக ஜித்தா,ரியாத்,தமாம் போன்ற நகரங்களில் இருந்து தமுமுகவினர் சுமார் 70 பேர் கொண்டவர்கள் மக்கா நகர் சென்றனர்.

(21-08-2018)முதல் (23-08-2018) வரையிலும் ஹாஜிகளுக்கு எண்ணற்ற பணிவிடைகளை செய்தனர்.

இதில் முடியாத ஹாஜிகளுக்கு நான்கு சக்கர நாற்காலியின் மூலம் அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது, சைத்தானுக்கு கல் எறிய உதவுவது, தண்ணீர் பாட்டில்கள், பேரித்தம் பழங்கள் வழங்குவது, அவர்கள் தங்கி இருக்கும் மினா கூடாரத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஹாஜிகளுக்கு சிரமமில்லாமல் அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்தில் கொண்டு போய் சேர்ப்பது என பலதரப்பட்ட பணிவிடைகளை தமுமுக செயல் வீரர்கள் செவ்வனே செய்தனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் தமுமுகவின் சேவை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஓர் சான்றாக உள்ளது.

தமுமுக செயல் வீரர்கள், ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img