Thursday, March 19, 2026

அதிரையில் கலைகிறதா ததஜ கிளை??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது.

முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை 3 ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அதிரை ததஜ கிளை 3 தற்காலிகமாக தாவா பணிகள் போன்றவற்றை நிறுத்தி வைப்பதாகவும், பிறை பார்க்கும் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைக் கூறி மார்க்க விஷயத்தில் ததஜ தலைமை கேலி செய்கிறது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார விஷயத்தில் 120 சிறுவர்களுக்கான ஒரு ஆண்டு செலவு 60 லட்சம் ஆகும் போது, 6 கோடியே 67 லட்சம் செலவு என பொதுக்குழுவில் அறிவித்து, மீதமுள்ள அந்த 6 கோடிக்கு தெளிவான கணக்கு காட்டாமல் இருப்பதனாலும்,ததஜ தலைமை மேல் இருக்கும் கடும் அதிருப்தியினாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை நகர கிளை 3 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனுடைய பிரத்யேக (Exclusive) வீடியோ விரைவில்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img