Monday, December 1, 2025

அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன.

புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ அல்லது நாளை காலையோ மின் வினியோகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

கஜா புயலின் வேகத்தால் நமது வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் நல்ல முறையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

வெளிவாசலுக்கும்,பின்புறத்திற்க்கு செல்லும் மின் வயர்கள் சேதாரம் இன்றி நல்ல முறையாக உள்ளாதா என கவனிக்க தவறாதீர்.

மொட்டை மாடியில் போடப்பட்ட கூரைகள் காற்றில் அடித்து சென்றுள்ளது,அதில் இருந்த மின் இணைப்பை முழுவதுமாக மின் தொழிலாளர் கொண்டு முழுமையாக நீக்க வேண்டும்.

ஆடு,மாடு தொழுவங்களில் இருந்த மின் இணைப்பு சரிவர உள்ளனவா என கண்காணிக்க மறவாதீர்.

கல்வி கூடங்களில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதாரம் இன்றி உள்ளதா என ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தென்னை தோப்புகளில்ப் ஆழ்துளை கிணறுகளுக்கு போடப்பட்ட மின் இணைப்பை மின் வாரிய ஊழியரின் துணையுடன் துண்டிக்க வேண்டும்.

குறிப்பாக மின் வாரிய ஊழியர்கள் அவசர கதியில் மின் இணைப்பை கொடுக்க அயராது பாடு படுகின்றனர், அவர்களின் பணி 100℅ முழுமை பெறாத நிலையில் உயரழுத்த மின் வயர்கள் முறையாக பொருத்தி இருக்க மாட்டாது, இதனை பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு மின்சார ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், அவசர கால உதவிக்கு மின்சார வாரியத்தையோ,அல்லது தன்னார்வலர்களை அழைத்து உதவி கோரலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img