Monday, February 2, 2026

மல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில்  திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 29) மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.பீனாமுனா நூர்தீன் தலைமையில் கூட்டம் நமைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ  பழனிமாணிக்கம் கலந்துகொண்டு கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் கஜாவில் பாதிக்கப்பட்ட பகுதியான மல்லிப்பட்டிணத்தில் அரசு நிவாரணம் மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிடுவதில்லை என்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.குறைகளை கேட்ட பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதாக கூறினார்.

கூட்டத்தில் பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் குமார்,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் MKS ஹபீப் முகமது, மூத்த நிர்வாகிகள் கபீர்தாஹீர்,காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்,கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீரப்பன், அப்துல் காதர் தமிழ்நாடு விசைப்படகு மீனவர்  நலசங்க மாநில செயலாளர் AK.தாஜுதீன்,ராஜிவ்காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் திமுகவின் நிர்வாகிகள்,தோழமை கட்சியினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

பட உதவி நூருல் அமீன் (திமுக இளைஞரணி)

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img