Monday, February 2, 2026

முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உடல் நசுங்கி பலி…!

spot_imgspot_imgspot_imgspot_img

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சுந்தரவேல். இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் நகர செயலா ளராக இருந்தார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு கண் பிரச்னை. அதற்காக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரை சந்திக்க முன் அனுமதி வாங்கியிருந்தனர். காலை 9 மணிக்கு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதால் காலையில் 5 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து காரில் கிளம்பினர். காரை அவர்கள் டிரைவர் வீரமணி ஓட்டினார்.

 

கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, கண்டெய்னர் லாரி மீது, கார் மோதியது. மோதிய வேகத்தில் கண்டெய்னரின் அடியில் புகுந்து கார் நசுங்கியது. இதில் சுந்தரவேல், அவர் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்தந்தும் உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட காரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி காரில் இருந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img