Monday, December 1, 2025

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் இந்த இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு, தேர்வு பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொடக்க, இடைநிலை, மேல்நிலைக்கல்வி மாணவர்கள் இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின்போது மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் இந்த ஆண்டு முதல் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையினை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களது மாற்றுச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கமாகும் மாணவர்களது மாற்றுச்சான்றிதழ் மென்நகலில் அலுவலக முத்திரை மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அசலாக வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மென்நகலில் தலைமையாசிரியரின் கையொப்பமின்றி மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. இந்த நடைமுறைகளை நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை சுற்றறிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...
spot_imgspot_imgspot_imgspot_img