Friday, December 12, 2025

சென்னையிலிருந்து மீண்டும் இயங்குகிறது சர்வதேச விமானங்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டம் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் வருவோர் தனிமைப்படுத்தப்படும் அச்சத்தால் கொச்சி போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு வந்து சாலை வழியாக தமிழகத்திற்கு வந்தனர்.

பெரும்பாலான மத்திய அரசின் திட்டமான வந்தே பாரத் விமானக்கள் பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. தற்போது தமிழக அரசின் தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

COVID19 நெகட்டிவ் மருத்துவச் சான்றுடன் வருவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்க வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தோடர்ந்து சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு (அமீரகத்திற்கு) சிறிய அளவில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை  வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் 30 தேதி வரை 7 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த மாதம் செப்டம்பர் 19 ம் தேதி அமீரகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img