அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் 50 ஆம் ஆண்டு கோல்டன் ஜூப்ளி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு பிரமுகர்கள், பிற பள்ளி,கல்லூரி ,ஆசிரியர்கள்,மாணவர்கள் & பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சிறிய சிறிய வியாபார கடைகள் அமைத்து பொதுமக்கள் விற்பனை செய்துவருகிறார்கள்.
மேலும் அங்கு பொருட்களை வாங்கிவிட்டு பணத்திற்கு பதிலாக சிறுபிள்ளைகள் விளையாட்டுக்காக கடைகளில் விற்க கூடிய பணம் போன்ற அச்சடிக்கபட்ட ரூ500/-காகிதங்களை கொடுத்து சில கயவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் குறிப்பாக இதை குடுத்து மாற்றியது சிறுவர்கள் இல்லை ஆனால் மாற்றியது இளைஞர்கள் எனவும் பல முறை மாற்றியதும் தெரியவந்துள்ளது.
இதனால் சுதாரித்து கொண்ட வியாபாரிகள் அவர்களை கேட்டதும் தெரியாமல் தந்து விட்டதாக அங்கிருந்து கூட்டத்திற்கு நழுவி விட்டதாகவும் வேறு சில இளைஞர்கள் மூலம் இது போன்று மீண்டும் மாற்ற முயற்சித்தக்காக கூறினார்.
இந்த புதிய நூதன திருட்டு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவே காவல் துறையில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் வியாபாரிகள் பொதுமக்கள் உரிய முறையில் ஆரய்ந்து ரூபாய் நோட்டுகளை பார்த்து வாங்க வேண்டும் என தெரிவித்தார்.

