பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.ஜே. ஜியாவுதீன், தனது ‘கத்தரிக்கோல்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
சமூக ஆர்வலராக நீண்டகாலம் மக்கள் பணியாற்றி வந்த ஜியாவுதீன், தற்போது அரசியல் களத்தில் தனித்து நின்று களம் காண்கிறார். சாதி மற்றும் மதங்களைக் கடந்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக மக்களின் வலிகளையும், வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் உணர்ந்து செயல்பட்டு வருவதால், வெற்றி பெற்றால் தொகுதியின் மாற்றத்திற்காகத் தீவிரமாக உழைப்பேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.
“கஜா புயலின் மக்களோடு மக்களாக சேவையாற்றிய ஜியாவுதீன்க்கு , தேர்தல் களத்தில் வரிசை எண் 11-ல் கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியின் முன்னேற்றத்திற்காக ஒருமுறை மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் குரலாகத் தான் இருப்பேன் என்றும் அவர் பரப்புரையில் தெரிவித்து வருகிறார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதி முழுவதும் அவரது பிரச்சாரம் தற்பொழுது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!
More like this

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!
பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில்...
அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு...

“வேட்புமனுக்கள் குவிந்த பட்டுக்கோட்டை! தேர்தல் களம் தீவிரம் – திமுகவுக்குச் சாதகமாகச்...
பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று ஒரே நாளில் 16 நபர்கள்...





