பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது மன்றத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, அப்பகுதி மக்களின் நலன் கருதி மன்றத்தின் சார்பாக சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அவரிடம் வழங்கப்பட்டது.
கோரிக்கைகள்:-
1. 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அதாவது மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் அருகாமையில் இருக்கும் புது குளத்தில நீருடன்கழிவு நீரும் கலந்து குளங்களில் தேங்குவதால் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது. முறையான வடிகால் அமைத்து கலக்கக்கூடிய கழிவு நீரை தடுத்து நிறுத்தி மாற்று வழி அமைத்து சுத்தம் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மரைக்காகுளம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ( பெண்கள் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து, சிஎம்பி வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்பதோடு பெண்களுக்கு நடைமேடை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
3. ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் மேலத்தெரு சானாவயல் சவுக்கு கொள்ளை பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி, போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல்
அந்த பகுதியில் வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவே தாங்கள் வெற்றி பெற்றவுடன் அந்தப் பகுதி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
4. அதிராம்பட்டினம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் நிலையில், விபத்தில் காயமடைபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான அவசர சிகிச்சை பிரிவு (Emergency Care) சரிவர செயல்படுவதில்லை.ஏழை எளிய நடுத்தர மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24×7 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
5. அதிராம்பட்டினம் பேரூராட்சியாக இருந்த நிலையில் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 27 வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாங்கள் வெற்றி பெற்றவுடன் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
6. அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்ககோரி பல ஆண்டு களாக கோரிக்கை வைத்தும் இதுவரை யாரும் செய்து தராத காரணத்தால் தாங்கள் வெற்றி பெற்றவுடன் அதிராம்பட்டினத்திற்கு தீயணைப்பு நிலையம் விரைந்து அமைத்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் வெற்றி பெற்றவுடன் எங்களின் இந்த பிரதான ஆறு கோரிக்கைகளையும் தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.













