Wednesday, March 18, 2026

ரத்த அழுத்தம் சீராக உள்ளது : நலமுடன் உள்ளார் கலைஞர் காவேரி மருத்துவமனை அறிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சுவாசக் கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்னர் செயற்கை சுவாசக் குழாய் மாற்றுவதற்காக மருத்துவமனை சென்று வீடு திரும்பினார்.

இதனிடையே தொடர்ந்து வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கலைஞருக்கு சிறுநீரக தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்த காரணத்தினால் மீண்டும் ஆம்புலன்ஸ் வரவலைக்கப்பட்டு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததின் அடிப்படையில் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தமிழக முன்னால் முதலமைச்சர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் அடிப்படையில் தற்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது இதனால் அவர் அபாய கட்டத்தினை தாண்டிவிட்டார் என குறிப்பிடபட்டுள்ளது.

காவேரி மருத்துவனையில் கூடியிருந்த திமுக தொண்டர்களுக்கு இந்த மருத்துவ அறிக்கை சற்று நிம்மதியும் ஆறுதலும் தருவதாக அங்கு கூடியிருந்த திமுக தொண்டரான மதிமாரன் நம்மிடம் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img