Wednesday, March 18, 2026

கலைஞருக்கு கடிதம் எழுதிய பேத்தி!!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து திமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ‘தலைவா நீ எழுந்து வா, மீண்டு வா தலைவா’ என கண்ணீர் மல்க கோஷம் எழுப்பிய படி மருத்துவமனை வெளியே தனது தலைவரை காண காத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிராக்லின், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடிதம் டாக்டர் மு.கருணாநிதி தாத்தாவுக்காக நான் எழுதுகிறேன்.,

“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும். அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். எப்பொழுது நீங்கள் நோய்வாய்ப்பட்டீர்களோ, அப்ப நான் அழுதேன். உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்ணினேன். நேற்று எனது தாய், என்னிடம் கூறினார், நீங்கள் தற்போது நலமாக இருக்கிறீர்கள் என்று, அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. இன்று நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாகவும் சென்றேன்” என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை திமு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img