Monday, February 2, 2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு அதிரடி உத்தரவு…!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர் அறிவித்துள்ளார்.

மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9.55 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.


11 ஆம் வகுப்புக்கு இன்னும் இரு தேர்வுகளும், 12 ஆம் வகுப்புகளுக்கு இன்னு்ம ஒரு தேர்வும் இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்கான கால அட்டவணையும் பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img