Friday, May 3, 2024

சென்னை மெட்ரோ, விமான நிலையம் மூடல்… செம்பரம்பாக்கத்தில் கூடுதல் நீர் திறப்பு!!

Share post:

Date:

- Advertisement -

நிவர்’ புயல் காரணமாக மெட்ரோ சேவைகள் இன்று இரவு 7 மணிமுதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னையில் இருந்து நாளை கோயம்புத்தூர், மதுரை, மேற்கு வங்கம் செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘கோவை-சென்னை’, ‘மதுரை-சென்னை’ உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு அளவு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட இருப்பதால் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 35 அடியில், தற்போது 30 அடி நீர்மட்டம் எட்டியதால், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா மற்றும் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...