சாலை விரிவாக்கம் காரணமாக அதிரை பேருந்துநிலையம் அருகில் இருந்த மின் மாற்றியை பக்கத்தில் உள்ள இடத்தில் மாற்ற மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி புதிதாக மின் கம்பங்களை அமைத்து அதில் மின் மாற்றியை பொருத்தியுள்ளனர். ஆனால் மின் மாற்றிக்கான பழைய கம்பங்கள், இரும்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பொறுப்பற்ற முறையில் அப்படியே சாய்த்து வைத்துவிட்டு மின் வாரிய ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.மாத கணக்கில் பேருந்து நிலையத்தில் சாய்ந்து கிடக்கும் அந்த மின் கம்பங்களை அகற்ற மின்வாரிய அலுவலர்கள் முன்வராத சூழலில் சில சமூக விரோதிகள் அதில் இருக்க கூடிய இரும்பு பொருட்களை திருடி செல்வதாக கூறப்படுகிறது. இதேநிலை நீடித்தால் கோட்டையை கரையான் அரித்த கதையாய் மின் வாரியத்திற்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடர்கள் முழுமையாக திருடி சென்று மின் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்திவிடுவார்கள் என அஞ்சப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக உடனடியாக பேருந்து நிலையத்தில் கிடக்கும் பழைய மின் மாற்றியின் உபகரணங்களை அதிரை மின்வாரியம் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...