Monday, March 9, 2026

தமிழகம் முழுவதும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள்,இணையதளம் செயல்படாது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் இன்று 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரை டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில் கூறியுள்ளது. இதே போன்று நாளை இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் இணையதளம் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.

கணிணிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. மேலும் கணிணி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணிணியில் சேர்க்கும் பணி நடைபெறஉள்ளதால் சேவையில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணிணியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img