Thursday, March 19, 2026

முத்துப்பேட்டையில் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.,அதிரை மக்களுக்கு அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வருகின்ற (22/04/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் சிறுபாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்த உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல எழுத்தாளர் வே.மதிமாறன், விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.ஷரீபு, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர் பாத்திமா முஸப்பர், காயிதேமில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியாகான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆர்ப்பட்டதிர்க்கு எந்த வித கட்சி மற்றும் இயக்க வேறுபாடு இன்றி பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அதிரை, முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img