Sunday, February 1, 2026

என்று தீருமோ கடற்கரைத் தெருவின் அவலம் ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் பிரதான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி நிலையம் , மதரஸா என சிறுகுழந்தைகள் அதிகமாக இருக்கும் இங்கு , சாக்கடை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைத் தெருவாசிகள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதிரை பேரூராட்சி கண்டும் காணாமல் உள்ளது. இந்த சாக்கடை பிரச்சனை தொடர்பாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ திரு. C.V. சேகரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இது வரை அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் நிரம்பி வழிந்து ரோட்டில் ஆறு போல ஓடும் சாக்கடையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் , பள்ளி குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கடற்கரைத் தெருவில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? அல்லது வழக்கம்போல் கண்டும் காணாமல் இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img