Monday, March 23, 2026

அதிரையில் பரவி வரும் டெங்கு…சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் உருக்குலைந்த அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவ்விவகாரம் குறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர், டிடிஹெச், ஹெல்த் இன்ஸ்பெக்டர், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து காய்ச்சல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அதிராமபட்டினம் பேரூராட்சி துப்புறவு ஆய்வாளர், மேஸ்திரி, சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அதிரை பேரூராட்சியின் சார்பில் கொசு மருந்து மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img