Monday, March 23, 2026

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தியது. இதில் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன.

இன்று 12.45 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவித்தார்.

திமுக :

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி
கள்ளக்குறிச்சி

காங்கிரஸ் :

ஆரணி, திருவள்ளூர், கரூர், விருதுநகர், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் :

விழுப்புரம், சிதம்பரம்

இந்திய கம்யூனிஸ்ட் :

திருப்பூர், நாகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :

கோவை, மதுரை

மதிமுக :

ஈரோடு

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் :

இராமநாதபுரம்

கொ.ம.தே.க :

நாமக்கல்

ஐ.ஜே.கே :

பெரம்பலூர்

ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img