Friday, March 20, 2026

அதிரையில் அதிவேக ரயிலை காண மக்கள்.ஆர்வம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம் ரயில்.நிலைய பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பயனிகள் ரயிலை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து இன்று காலை சரியாக 10;44மணியளவில் அதிவேக ரயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றன.

முன்னதாக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து மக்கள் கூட்டம் குவிந்தன.

சுமார் 4 வினாடிகளில் கடந்து சென்ற ரயிலை மக்கள் கையசைத்து ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.

மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த அதிவேக ரயிலில் CRS கமிஷனர் ஆஃப் ரயில்வே சேஃப்டி ஆபிசர் உள்ளிட்ட 16 பாதுக்காப்பு அதிகாரிகள் இருப்புபாதையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பாதுக்காப்பு சோதனை குறித்த தகவலை உயரதிகாரிகளுக்கு அளித்த பின்னர் பயணிகள் ரயில் இயக்குவதற்கான நடவைக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில் நிலைய பணிகளுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்ட அஹமது அலி ஜஃபர் தொலைப்பேசி வாயிலாக எமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு தெரிவித்துள்ளார்.

அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் வழியே நேரலையில் ஏராளமான மக்கள் இந்த ரயில் வெள்ளோட்டத்தை கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img