Wednesday, February 19, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகவுள்ளன.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது.

சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்

www.dge.tn.gov.in

www.tnresults.nic.in

https://results.digilocker.gov.in

ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் தேசிய தகவல் மையம், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும்,
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img