Friday, March 13, 2026

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை இணையதங்களில் சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்றும், பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே இரண்டாம் தேதி பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படும் என்றும், மே 2 முதல் நான்காம் தேதி வரை மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வில் வெற்றி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img