Friday, March 20, 2026

உத்தரப் பிரதேச பொதுதேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை !

spot_imgspot_imgspot_imgspot_img

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளித்தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கெளசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளில் எந்தவொரு மாணவ மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல், மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அலிகார், மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகள் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதனிடையே பள்ளி தேர்வின் போது காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரபிரதேச பள்ளிக்கல்வி இயக்குனரான வினய் குமார் கூறியுள்ளார். அதனால் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பை பொறுத்தவரை 50 அரசுப்பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 84 தனியார் பள்ளிகளும் 0 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பை பொறுத்தவரை 15 அரசுப்பள்ளிகளும், 58 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img