பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விநாயக தேவர் (88). இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை காலை வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அவரது இரண்டு கண்கள், குடும்பத்தார்கள் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின், கும்பகோணம் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அப்துல் ஜலீல், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ. விவேகானந்தம், முத்துப்பேட்டை லயன்சங்க உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
விநாயக தேவருக்கு ஜோதி ராமலிங்கம், சுப்பிரமணியன் மகன்களும், பாலசுந்தரி, ஞானோதயம், கமலா மகள்களும் உள்ளனர். அன்னாருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.







