Saturday, March 21, 2026

இந்தியாவே ஒரு பக்கம் நிற்க… தனித்து நின்று பாஜகவுக்கு மரண அடி கொடுத்த தமிழகம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுக்க பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அப்படியே அதற்கு எதிரான சூழ்நிலை நிலவி வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. முதல் சுற்று முடிவுகள் தற்போது வரை வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது.

இது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனால் பெரிய வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.

நாடு முழுக்க 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டுமே தனியாக 260க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று கூட ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

ஆனால தமிழகத்தில் நிலைமை அப்படியே வேறாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் 2 இடங்களில் மட்டும்தான் அதிமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழகத்தில் அதிமுக வரிசையாக எல்லா எம்.பிக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் பாஜகவை மொத்தமாக புறக்கணித்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கே தமிழகம் ஆதரவு அளித்துள்ளது.

பொதுவாக கோ பேக் மோடி என்றால் எல்லோருக்கும் தமிழகம்தான் நினைவிற்கு வரும். தற்போது தேர்தலிலும் அதையே தமிழகம் செய்து காட்டி இருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுக்க பாஜகவிற்கு வாக்களித்து இருக்கும் போது, தமிழகம் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img