Monday, February 2, 2026

கிடு கிடுவென உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக விலை ஏறத் தொடங்கியது. தற்போது சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 6 நாட்களில் ஏறத்தாழ 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 76.83 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 ஆக விற்பனையாகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.98 காசுகளும் டீசல் விலை ரூ.1.61 காசுகளும் உயர்ந்துள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img