Thursday, March 26, 2026

மொத்த கடையும் காலி… அதிர வைக்கும் திருச்சி லலிதா ஜூவல்லரி படுகொள்ளை !

spot_imgspot_imgspot_imgspot_img

வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க” என்று லலிதா ஜூவல்லரி ஊழியர்கள் பதறியவாறே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த ஆய்வில்தான், தலையில் குல்லா, முகமூடி, கிளவுஸ், ஜெர்கின்.. சகிதம் லலிதா ஜூவல்லரிக்குள் 2 பேர் நுழைவது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட அருகேதான் லலிதா ஜூவல்லரி கடை உள்ளது. இது பண்டிகை காலம் என்பதால் புது டிசைன் நகைகள் கடைக்குள் இருந்தன.

காந்தி ஜெயந்தி லீவு என்பதால், கஸ்டமர்கள் நிறைய பேர் இன்று வர வாய்ப்புள்ளது என்பதால்தான் கடையை வாடிக்கையாளர்கள் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு சீக்கிரமாக ஊழியர்கள் திறந்தனர்.

அப்போதுதான் சுவரில் இருந்த பெரிய ஓட்டையை கண்டு அதிர்ந்தனர். இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த மைதானத்தின் வழியாக பக்கவாட்டு சுவரில்தான், கொள்ளையர்கள் துளையிட்டு உள்ளே வந்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்பில் நகையை காணோம் என்றதுமே ஊழியர்கள் டென்ஷன் ஆகி பதறி விட்டனர். காலையில் 8 மணிக்கே இவர்கள் பதற்றமாக இருப்பதை பார்த்து, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் விசாரித்துள்ளனர்.

அதற்கு ஊழியர்கள், “வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க” என்று சொல்லி உள்ளனர். இதையடுத்து, கமிஷனர் அமல்ராஜ் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை, ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் சுவற்றிலும் ஓட்டை போட்டு, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்தார்கள். ஆனால், அந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில், இப்போது லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img