அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அதிரை முழுவதும் 3000 மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் நடப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், அதிரை முழுவதும் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு கூண்டுகளும் வைக்கப்பட்டன.