Wednesday, March 25, 2026

சுர்ஜித்தை மீட்க 11 கோடி செலவானதா ? உண்மை என்ன ?

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி மாவட்டம் மாணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்னும் இரண்டு வயது குழந்தை விளையாடி கொண்டு இருக்கும்போது ஆழ்துளை கிணற்றில்  தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க வெள்ளிக்கிழமை தொடங்கி  மீட்பு பணி சுமார் 80 மணி நேரமாக  மீட்பு பணி நடந்தது. ஆனால் ஐந்து நாட்கள பிறகு குழந்தை சுர்ஜித்தின் உடலை மட்டுமே மீட்பு குழு மீட்டது.

இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மை இல்லை என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துளள விளக்கத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது.

சுர்ஜித் மீட்புப் பணிக்காக ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை; மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒஎன்ஜிசி, என்எல்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் செலவுக்கான தொகையை கேட்கவில்லை. 5 லட்சம் ரூபாய் பணமும், 5000 லிட்டர் டீசலும் தான் செலவானது என்று தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img