Saturday, March 21, 2026

சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்துங்கள் – ஸ்டாலின் சாடல் !

spot_imgspot_imgspot_imgspot_img

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலரிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குரள் கூறப்பட்டு குறளுக்கான விளக்கம் ஒன்றையும் பதிவிட்டிருந்தது.

வள்ளுவரின் வழக்கத்துக்கு மாறான புகைப்படத்தால் கொதிப்படைந்த தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள், பாஜகவை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் ! எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என பாஜகவினரை கடுமையாக சாடியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img