Monday, February 2, 2026

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் சப்-ஜூனியர் கால்பந்து தொடர் போட்டி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான ரோல்லிங் டிராபி கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது.

இத்தொடரில் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி அணி, காதிர் முகைதீன் பள்ளி அணி, AL பள்ளி அணி, பட்டுக்கோட்டை லாரல் பள்ளி அணி, பிருந்தாவன் பள்ளி அணி உள்பட 7 அணிகள் பங்குபெற்று விளையாடின.

இத்தொடர் போட்டிக்கு அதிரை இமாம் ஷாஃபி பள்ளி துணை தாளாளர் M.S. முகம்மது ஆஜம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் முஹம்மது சலீம், அதிரை AFFA கால்பந்து அணியின் நிர்வாகிகள் அஹமது அனஸ், சேக் தம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் மோதிய காதிர் முகைதீன் பள்ளி அணி, எதிர்த்து விளையாடிய பட்டுக்கோட்டை பள்ளி அணியை 1-0 என்ற கோல் கனக்க்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img