Tuesday, March 24, 2026

CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு – மதுக்கூரில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள் எழுச்சி மாநாடு !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களால் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை 17/01/2020 வெள்ளிக்கிழமை NRC-CAA-NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் தர்ஹா திடலில் இந்த எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் பழனி ஃபாரூக், தமிழ் விடுதலைப்புலி கட்சியின் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இதில் பொதுமக்களும், இளைஞர்களும், பெண்களும் கலந்துகொள்ள வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாஅத்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தர்ஹா திடலில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு : நாளைய மாநாடு நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img