Saturday, February 7, 2026

அதிரை மக்கள் மீது வெறுப்பை கக்கிய மருத்துவ அதிகாரி மீது PFI புகார்.!

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் புகார் இந்தியா முழுவதும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத்திற்கு எதிராக தொடர்ந்து பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் ஏரியா சார்பில் மல்லிப்பட்டினத்தில் 2 புகார் மனுவும், சேதுபாவாசத்திரத்தில் ஒரு புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் முடச்சிக்காட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், (01/05/2020) அன்று அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ளும்போது அப்பகுதியை சேர்ந்த அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் நோயாளிகள் அனைவரும் தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் என வெறுப்பு தரும் பேச்சை பேசியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மல்லிப்பட்டினம் ஏரியா தலைவர் அவர்கள் சார்பில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு :-

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
மல்லிப்பட்டினம் ஏரியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img