Wednesday, March 18, 2026

டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – திருமாவளவன் தலைமையில் விசிக-வினர் போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

மே 7 அன்று டாஸ்மாக் – மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 வரை தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காண்-ஒலிக் கூடல் (Video Conference) மூலமாகவும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

“தமிழக அரசே,
மதுபானக் கடைகளைத் திறக்காதே! மக்களைக் கொல்லத் துணியாதே!

கொரோனா பரவச் செய்யாதே! குடிகெடுக்க முனையாதே! ” – என திருமாவளவன் கண்டன முழக்கங்களை காண்-ஒலிக் கூடல் மூலம் எழுப்ப விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று முழக்க அட்டைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு ஓங்கிக் குரல்கொடுத்தனர்.

போரட்டத்தின் நிறைவில் தொல். திருமாவளவன் MP கண்டன உரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP மற்றும் முன்னணி பொறுப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img