Sunday, December 14, 2025

அதிரையில் மதுபோதை ஆசாமிகள் காவல்துறை பெயரில் தாக்குதல் : மயக்கமான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு பையில் இருக்கும் பணத்தை எடு என்று கூறியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறித்துதுக் கொண்டு இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த இருவரும் மயக்க நிலையில் அங்கேயே கிடந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

காவலர்கள் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு இளைஞர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் உண்மையில் காவலர்களா ? அல்லது காவல்துறையினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியா ?

அதிரை காவல் துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img