Sunday, February 1, 2026

ஏரோபிளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது – நாஞ்சில் சம்பத் பொளேர் !

spot_imgspot_imgspot_imgspot_img

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. இந்த முறை இக்குறையைப் போக்க வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. அதிமுகவோடு கூட்டணியில் இருப்பதாலும், இம்முறை கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ‘எம்.எல்.ஏ. தொகுதியில் பாஜகவை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவருக்கும் இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும்’ என்று பாஜக தலைவர் எல்.முருகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

எல்.முருகனின் இந்த அறிவிப்புக்கு நாஞ்சில் சம்பத் பதிலடிக் கொடுத்திருக்கிறார். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றபோது கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியும் இன்னோவா காரையும் அன்றையை முதல்வர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கினார். அன்று முதலே இன்னோவா காரும் தமிழக அரசியலில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. தற்போது பாஜக தலைவரும் இன்னோவா கார் பரிசு என்று அறிவித்திருப்பதால், இன்னோவா காரின் தாக்கம் தேர்தல் வரை எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “வெற்றிபெற வைக்கிற மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் என்றால் பரிசுன்னா, இனி என்ன பாவம் செய்யப்போறங்கன்னு கணக்கிட்டுப் பார்க்கணும். இந்த அறிவிப்பு தேர்தல்ல பாஜக பல்லாயிரக்கணக்கான கோடிகள செலவு செய்ய தயாராயிடுச்சின்னு காட்டுது. அவுங்களுக்கு (பாஜக) நான் எச்சரிக்கையாவே சொல்றேன். இன்னோவா கார் அல்ல, ஏரோபிளேனே வாங்கிக்கொடுத்தாலும் தமிழ்நாட்டுல தாமரை மலரவே மலராது” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img